விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த ஆசூர் கிராமத்தில் கங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விக்கிரவாண்டி அடுத்த ஆசூர் கிராமத்திலுள்ள கங்கையம்மன் கோவில் கிராம மக்களால் புதுப்பிக்கப்பட்டு, அதன் கும்பாபிஷேகம் நடந்தது.
இதையொட்டி கடந்த 3ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று முன்தினம் காலை 9:30 மணிக்கு, இரண்டாம் கால யாகபூஜைகள் முடிந்து கடம்புறப்பாடு நடந்தது. காலை 9:50 மணிக்கு, கோவில் கலசத்திற்கு ஜானகிபுரம் வெங்கடேச அய்யர் புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகத்தை நடத்தினார். விழா ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் முன்னின்று செய்தனர்.