பதிவு செய்த நாள்
06
ஜூன்
2017
02:06
பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அருகே, கொட்டவாடி பேளூர் கரடிப்பட்டி, கருணாகரேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம், வைகாசி சிறப்பு பூஜை நடந்தது. அதில்,
மூலவர் கருணாகரேஸ்வரர் மற்றும் அம்பாள் கருணாகரேஸ்வரி ஆகியோருக்கு, திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், பழவகை, தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. உற்சவ மூர்த்திகளான நடராஜர் - அம்பாள் சிவகாமி, ரிஷப
வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.