பதிவு செய்த நாள்
06
ஜூன்
2017
02:06
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டையில் உள்ள, பழமையான வீரபத்திர சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது. நாமகிரிப்பேட்டையில், பழமையான வீரபத்திரசுவாமி
கோவில் உள்ளது. 500 ஆண்டுகளுக்கு முன், இக்கோவிலில் நிறுவப்பட்ட மடத்தில், லிங்க தீட்சை சிவவழிபாடு நடந்துள்ளது.
இந்தியாவில் உள்ள, 3,000 வீர சைவ மடங்களில் நாமகிரிப்பேட்டை வீரபத்திரசுவாமி கோவில் மடமும் ஒன்று. இக்கோவில் கோபுர பணிகள், பல ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், நாளை (ஜூன், 7) அன்று கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. இதையொட்டி, முதல் நாள் நிகழ்ச்சியாக நேற்று மாலை, கங்கா பூஜை, கணபதி பூஜை, வாஸ்து பூஜை நடந்தது.
இன்று மாலை, 5:00 மணிக்கு கோபூஜை, தாலபூஜை, முதற்கால யாக பூஜை தொடங்குகிறது. இரவு, 9:00 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜை நடக்கிறது. நாளை காலை, 9:00 மணிக்கு மேல், 10:00 மணிக்குள் வீரபத்திரர் சுவாமிக்கு கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது.
மேலும், கோவில் வளாகத்தில் உள்ள ராஜகணபதி, பத்ரகாளியம்மன், முருகன், நவக்கிரகங்கள், பஞ்சலிங்கம், ரேணுகாச்சாரியார் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம்
நடக்கிறது. ஏற்பாடுகளை, தென்னிந்திய வீரசைவ ஜங்கம் மஹாஜன சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.