பழநியில் வைகாசி விசாகம் கோலாகலம்: இன்று திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூன் 2017 02:06
பழநி: வைகாசி விசாகத் திருவிழாவில் இன்று இரவு திருக்கல்யாணமும், நாளை தேரோட்டமும் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில், முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானையுடன் அருள்பாலித்தார்.
பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா ஜூன் 1ல் துவங்கி 10ம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக் குமாரசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் இன்று(ஜூன் 6ல்) இரவு7 மணிக்கு நடக்கிறது. வைகாசி விசாகத்தை முன்னிட்டு, மலைக்கோயில் நடை, நாளை அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெறும். அன்று மாலை 4.30 மணிக்கு பெரியநாயகிஅம்மன் கோயில் தேர் நிலையிலிருந்து புறப்பாடாகி, நான்குரத வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது.விழாவின் கடைசி நாளான ஜூன் 10ல் திருஞானசம்பத்தருக்கு பாலூட்டும் விழா நடக்கும்.