பதிவு செய்த நாள்
08
ஜூன்
2017
12:06
சென்னை: தமிழ்க் கட வுளின் அவதார நாளான வைகாசி விசாகத்தை முன்னிட்டு, அனைத்து முருகன் கோவில்களிலும், சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து, நேர்த்திக்கடனை நிறைவேற்றனர். விசாகம், ஞானச் சிறப்புக்குரிய நட்சத்திரம். தமிழ்க்கடவுள் எனப்போற்றப்படும் முருகப்பெருமான் அவதரித்தது, விசாக நட்சத்திரத்தில் தான். புத்தர் பிறந்ததும், ஞானம் பெற்றதும், இந்த வைகாசி விசாகத்தில் தான்.வைகாசி விசாகமான நேற்று, சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோவில்; தேனாம்பேட்டை, பாலதண்டாயுதபாணி கோவில்; பூக்கடை, கந்தக்கோட்டம்; மயிலை சிங்காரவேலர் சன்னதி; குன்றத்துார், குமரன் கோவில்; பெசன்ட்நகர் அறுபடையப்பன் கோவில்; குரோம்பேட்டை , குமரன்குன்றம் உள்ளிட்ட முருகனின் அனைத்து கோவில்களிலும் விழாக் கோலம் பூண்டிருந்தது. அதிகாலை முதல், மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பக்தர்கள் பலர் விரதம் மேற்கொண்டு, பால்குடம், காவடி எடுத்து, அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தினர். பல கோவில்களில் உற்சவர் முருகப்பெ ருமான் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.