தீவனுார் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேர்த்திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூன் 2017 12:06
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் தேர்த்திருவிழா நடந்தது. திண்டிவனம் அடுத்த தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவில், 9ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா, கடந்த 29ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி, கடந்த 30ம் தேதி முதல் 4ம் தேதி வரை தினந்தோறும் காலையில் திருமஞ்சனமும், பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலாவும் நடந்தது. கடந்த 5ம் தேதி ஸ்ரீதேவி, பூதேவி சமேத நாராயணபெருமாள் சுவாமிகளுக்கு திருக்கல்யாணமும், சுவாமி வீதியுலாவும் நடந்தது. நேற்று தேர்திருவிழா நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் முனுசாமி மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.