பதிவு செய்த நாள்
09
ஜூன்
2017
12:06
காஞ்சிபுரம்: கைலாசநாதர் கோவில் வரலாறு குறித்த தகவல் பலகை, சுற்றுலா பயணியர் வசதிக்காக வைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில், பல்லவர் கால சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இங்குள்ள சிற்பவேலை பாடுகளைகாண, வெளிநாட்டு, பிற மாநில சுற்றுலா பயணியர் அதிகளவில் வருவர். இந்த கோவிலிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணியருக்கு, மூலவர் பெயர் மட்டும் தெரியும். அதன் முழு வரலாறு பலருக்கு தெரிய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், கோவில் வரலாறு குறித்த தகவல் பலகை வைக் கும்படி, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை, கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது, தொல்லியல் துறை சார்பில், தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் அனைவருக்கும், அதன் வரலாறு தெரிந்து கொள்ளும் வசதி ஏற்பட்டுள்ளது.