பதிவு செய்த நாள்
15
நவ
2011
11:11
ஆழ்வார்குறிச்சி : கடையம் வில்வவனநாதர் - நித்யகல்யாணி அம்பாள் கோயிலில் நந்திக்கு முழுமையான வெள்ளி அங்கி அணிவிப்பு விழா நடந்தது.கடையம் வில்வவனநாதர் - நித்யகல்யாணி அம்பாள் கோயிலில் வில்வவனநாதர் சுவாமிக்கு முன் உள்ள நந்திக்கு வெள்ளி அங்கி சாத்தும் விழா காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. பின்னர் கும்ப அபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் கூடிய தீபாராதனை நடந்தது. சிறப்பு நிகழ்ச்சியாக கடையம் வில்வவனநாதர் சுவாமி திருவாசகம் முற்றோதுதல் குழுவினர் தலைவர் கல்யாணிசுந்தரம் தலைமையிலும், வி.கே.புரம் திருநாவுக்கரசு உழவாரக் குழு சார்பிலும் திருவாசகம் முற்றோதுதல் நடந்தது. மாலையில் அம்பாசமுத்திரம் ஏ.பி.ஆர்.ஏஜன்சிஸ் அண்ணாமலை செட்டியார் குடும்பத்தினர் முன்னிலையில் திருவாடுதுறை ஆதீனம் குருமகா சன்னிதானம், ஆந்திரா சுவாமிகள் கிருஷ்ணராவ் ஆகியோர் தலைமையில் வில்வவனநாதர் சன்னதிக்கு முன்புள்ள நந்திக்கு சுமார் 6 கிலோ எடையுள்ள வெள்ளி அங்கி சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சங்கர்நகர் கணேசபட்டர், ஆலய அர்ச்சகர் சுந்தரபட்டர், முத்துக்குமாரபட்டர், சுப்பிரமணியபட்டர், ரவணசமுத்திரம் கிருஷ்ணபட்டர் ஆகியோர் விசேஷ அலங்காரத்துடன் கூடிய சிறப்பு பூஜைகளை நடத்தினர். நித்யகல்யாணி அம்பாளுக்கு பூக்களால் ஆன பாவாடை அணிவிக்கப்பட்டிருந்தது.விழாவில் நிர்வாக அதிகாரி முருகன், கடையம் யூனியன் சேர்மன் சீனிவாசுகி ஜீவா, பணிநிறைவு தலைமையாசிரியர்கள் கல்யாணி சிவகாமிநாதன், சோமசுந்தரம், ராமன், நல்லாசிரியர் மீனாட்சிசுந்தரம், பணிநிறைவு தாசில்தார் கல்யாணசுந்தரம், பணிநிறைவு தொழிலாளர் நல ஆய்வாளர் அம்பலவாணன், டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, பல்க் சங்கரலிங்கம், முன்னாள் பஞ்., தலைவர் கோமதிநாயகம், பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி முதல்வர் முருகன் செட்டியார், கல்லூரி கண்காணிப்பாளர் நடராஜன், திருவாடுதுறை தேஸ்கார் சங்கரசுப்பிரமணியன், திருவாடுதுறை ஆய்வாளர் சொரிமுத்து, ஒமேகா பேச்சிமுத்து, இன்ஜினியர் அருள்நாராயணன், வக்கீல் தயாளலட்சுமணன், டிரைவர்கள் ஜெயக்குமார், முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக கடையம் வில்வவனநாதர் திருவாசகம் முற்றோதுதல் குழு தலைவர் கல்யாணசுந்தரம் தலைமையில் திருவாசகம் முற்றோதுதல் நடந்தது. பின்னர் பள்ளியறை சிறப்பு பூஜையும், பைரவர் பூஜையும், அன்னதானமும் நடந்தது.