பதிவு செய்த நாள்
10
ஜூன்
2017
02:06
சங்ககிரி: ஆஞ்சநேயர் கோவிலில், நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது. சங்ககிரி அருகே, ஆவரங்கம்பாளையத்தில், ராமபக்த ஆஞ்சநேயர் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. அங்கு, மஹா கும்பாபிஷேகம் முன்னிட்டு, இன்று காலை, 8:00 மணிக்கு, கணபதி ஹோமம், தீர்த்தக்குடம் எடுத்து வருதல், மாலை, 6:00 மணிக்கு வாஸ்து பூஜை, இரவு, 8:00 மணிக்கு முதல் கால யாக வேள்வி, 10:00 மணிக்கு மஹா தீபாராதனை நடக்கிறது. நாளை காலை,
5:30 மணிக்கு இரண்டாம் கால யாக வேள்வி, 6:30 மணிக்கு தீர்த்தக்குடம் ஞான உலா, 7:00 மணிக்குமேல், 8:00 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் மற்றும் அபிஷேகம், தீபாராதனை
நடைபெறும்.