கிருஷ்ணகிரி ஓம் சக்தி அம்மன் கோவில் 8ம் ஆண்டு பவுர்ணமி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூன் 2017 02:06
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம் அச்சமங்கலம் ஊராட்சி, கெட்டூர் கிராமத்தில் உள்ள ஓம் சக்தி அம்மன் கோவில், எட்டாம் ஆண்டு பவுர்ணமி பூஜை கடந்த, 8ல் துவங்கியது. நேற்று காலை, ஓம் சக்தி அம்மனுக்கு சாந்தி ஹோமம், தீர்த்த பிரசாதம், அபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை கணபதி ஹோமம் நடந்தது. இரவு ராஜரத்தினம் வழங்கும் தமிழாலயா இசைக்குழுவினரின் இன்னிசை கச்சேரி நடந்தது.