Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஒன்றுக்கு பத்தாக உதவுபவர்! தானம், தர்மம் இரண்டில் எது சிறந்தது?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எல்லா மதமும் உயர்ந்ததே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2017
05:06

காஞ்சிபுரம் மடத்தில் சந்தியாகாலத்தில் மாலை ஆறுமணியை ஒட்டி கூட்டம் அதிகமாகவே இருக்கும். மடத்தின் அருகே ஒரு மசூதி உண்டு. அதிலிருந்து மாலைத் தொழுகைக்காக ஆறு மணியை ஒட்டி ஒலிபெருக்கி மூலம் முழக்கம் எழுப்புவார்கள்.  புகழ்பெற்ற மடம் இருக்கும் இடத்தில் இந்த ஒலி ஏன் என சிலர் கருதினர். பெரியவரிடம் அனுமதி பெற்று, மசூதியைச் சேர்ந்தவர்களிடம் இதுபற்றி பேசலாம் என அவர்கள் முடிவு செய்தனர். ஒருநாள் பெரியவர் பக்தர்களுக்கு தரிசனம் தர வந்து அமர்ந்தார். அன்பர்கள் தங்கள் எண்ணத்தை சுவாமிகளிடம் தெரிவித்தனர். சுவாமிகள் அன்பர்களை அருள்பொங்கப் பார்த்த பின் பேசினார். அந்த சப்தம் நமக்கு இடைஞ்சல்னு நாம நெனச்சோம்னா, இங்கே சந்தியாகாலத்துல (மாலை) ஜனங்க அதிகம் வர்றதும், சப்தம் போட்டுப் பேசறதும் தங்களுக்கு இடைஞ்சல்னு அவாளும் நெனக்கலாமோ இல்லியோ? நாம சொன்னா அவா சப்தத்தைக் குறைச்சு வெப்பா. சந்தேகமில்லை. ஆனால் ஏன் சப்தத்தைக் குறைக்கணும்? சாயங்காலம் கேட்கும் அந்த ஒலி தானே சந்தியாவந்தன காலத்தை ஞாபகப்படுத்தறது? அது நல்லதுதானே?  அவா அஞ்சு வேளை தொழுகை பண்றா. நாம திரிகால சந்தியாவந்தனம் பண்றோமா? மூணுவேளை காயத்ரி ெஜபிக்கிறோமா? அவா மத ஆசாரத்தை விடாம இருக்கறதைப் பாத்தாவது, நமக்கு நம்ம மத ஆசாரத்தை அனுஷ்டிக்கணும்னு புத்தி வர வேண்டாமோ?

பரமாச்சாரியார் தொடர்ந்தார்:
எல்லா மதமும் ஒண்ணுதான். எல்லாமே பகவானை அடையற மார்க்கங்கள் தான். இங்கே இருந்து காசிக்குப் போறதுன்னா பஸ், ரயில், கார்..எதுல போனாலும் போய்ச் சேர்வோம் தானே! எல்லா மதங்கள் மூலமாவும் பகவானை அடையலாம். ஆனா மதம் மாறறதோ, மாத்தறதோ தான் தப்பு. ஏன் தெரியுமா? எல்லா மதமும் சம அந்தஸ்து உடையது. மதம் மாறறவன், தன் மதம் தாழ்வுன்னு நெனச்சுத்தானே மாறறான்? அப்படி கருதறது மகாபாவம். அதனால தான் பிறவியில எந்த மதம் அமைஞ்சுதோ, அதை ஸ்வீகரிச்சுண்டு அவாவா தங்களோட மத ஆசாரத்தை விடாம வாழணும்.

சுவாமிகள் தொடர்ந்து சொன்னார்:
அந்த ஒலி ஒண்ணும் தொந்தரவா இல்லே. அது பாட்டுக்கு இருக்கட்டும். நீங்க மூணு வேளை  சந்தியாவந்தனம் பண்ணுங்கோ. அதுதான் முக்கியம். லோகம் ஷேமமா இருக்கும்!
பெரியவர் வலக்கரம் உயர்த்தி ஆசிர்வதித்தபோது, அன்பர்கள் விழிகளில் பக்திக் கண்ணீர் தளும்பியது. - திருப்பூர் கிருஷ்ணன்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar