அல்லாஹ் தினமும் இரண்டு வானதுாதர்களை பூமிக்கு அனுப்புகிறான். இவர்களின் பணி என்ன தெரியுமா? ஒருவர், செலவு செய்கின்ற தாராள மனம் கொண்டவனுக்காக, “யா அல்லாஹ்! இவர் நன்மையான செயல்களுக்காக ஏராளமாகச் செலவிடுகிறார். இவருக்கு உன் அருளைக் கொடு. இவருக்கு நல்லதொரு பிரதிபலனைத் தா,” என்று சிபாரிசு செய்கிறார். இன்னொருவர் கஞ்சப்பிரபுக்களைக் கண்காணிப்பார். அவர்களுக்கு சாபம் கொடுப்பார். “இறைவா! கஞ்சத்தனம் புரிவோருக்கு அழிவைக் கொடு,” என்பார். செல்வம் அதிகமிருந்தும் நல்லதற்கு செலவிடாமல் பூட்டி வைப்பதை நபிகள் நாயகம் ஆதரிக்கவில்லை. “தேவைக்கு அதிகமான செல்வத்தை தேவையுடையவர்களுக்கு நீ செலவிடாவிட்டால், இறுதியில் அது உனக்கு தீங்கு பயக்கும். உன்னிடம் தேவைகளை நிறைவு செய்யும் அளவுக்கு மட்டுமே செல்வம் இருக்கின்றது என்றால், அதிலிருந்து நீ செலவிடாவிட்டால் அதற்காக அல்லாஹ் உன்னை கண்டிக்கமாட்டான்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: 6:45 மணி நாளை நோன்பு வைக்கும் நேரம்: 4:15 மணி.