பதிவு செய்த நாள்
15
ஜூன்
2017
02:06
சேலம்: ராஜகணபதி கோவில் உண்டியல் மூலம், 7.60 லட்சம் ரூபாய் வசூலானது. இந்து அறநிலையத்துறை சுகவனேஸ்வரர் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள, சேலம் ராஜகணபதி கோவிலில், மூன்று நிரந்தர உண்டியல்கள் அமைக்கப்பட்டுள்ளன. 42 நாட்களுக்கு பின், இவை மூன்றும் நேற்று திறக்கப்பட்டன.
சுகவனேஸ்வரர் கோவில் வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், இந்து அறநிலையத்துறை நாமக்கல் உதவி கமிஷனர் கிருஷ்ணன், சேலம் உதவி கமிஷனர் சபர்மதி முன்னிலையில்,
உண்டியல்களில் உள்ள பணம் மற்றும் தங்கம், வெள்ளி காணிக்கைகளை, கல்லூரி மாணவ, மாணவியர் எண்ணினர். இதில், ஏழு லட்சத்து, 60 ஆயிரத்து, 640 ரூபாய், 1.2 கிராம் தங்கம், 347
கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக கிடைத்தது.