ஊமச்சிகுளம்: திருப்பாலையில் உள்ள கிருஷ்ணன் கோயில் கும்பாபிஷேகம் 21 ஆண்டுகளுக்கு பின் நடந்தது. இதற்காக ஜூன் 11ல் பூஜைகள் நடந்து. ஜூன் 12ல் காலை கலச ஸ்தாபனம், அக்னி பிரதிஷ்டை, ஆவாகன பூஜைகள் முடிந்து முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு 5ம் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி முடிந்து மேள, தாளம் முழங்க குடங்கள் புறப்பாடு நடந்தது. காலை 10:30 மணிக்கு பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க பட்டர்கள் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். மாலையில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.