வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரம்மாவிற்கு சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூன் 2017 01:06
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார்‚ கீழையூர்‚ வீரட்டானேஸ்வரர் கோவிலில், பிரம்மாவிற்கு சிறப்பு வழிபாடு நடந்தது. திருக்கோவிலுார்‚ கீழையூர்‚ வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு தமிழ்மாத பிறப்பின்போதும், பிரம்மாவிற்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. அதன்படி ஆனிமாத பிறப்பையொட்டி, நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு‚ பிரம்மாவிற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு‚ கூட்டு பிரார்த்தனை நடந்தது. தொடர்ந்து சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.