Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புனித அந்தோணியார் சர்ச் திருவிழா நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ஆனி முதல் ஞாயிறு சிறப்பு பூஜை! நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ஆனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கன்னியாகுமரியில் திருப்பதி கோயில்: பணி வேகமாக நிறைவுபெறுகிறது
எழுத்தின் அளவு:
கன்னியாகுமரியில் திருப்பதி கோயில்: பணி வேகமாக நிறைவுபெறுகிறது

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2017
05:06

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் கட்டப்பட்டு வரும் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நிறைவு பெற்று வருகிறது. டிசம்பரில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு நடைபெறுகிறது. கன்னியாகுமரியில் திருப்பதி கோயில் கட்ட கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம் ஐந்தரை ஏக்கர் நிலம் வழங்கியது. 2013 ஜூன் நான்காம் தேதி பூமிபூஜை நடைபெற்றது. அதன் பின்னர் கடல் காற்றில் இருந்து பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், மணலின் உறுதி தன்மை பற்றியும் சென்னை ஐ.ஐ.டி. நிறுவனத்தில் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டது. இங்கு மண்ணின் உறுதி தன்மை நிரூபிக்கப்பட்ட பின்னர் இவர்களின் பரிந்துரையின் பேரில் பல தொழில்நுட்ப நுணுக்கங்கள் கட்டுமானத்தில் கடை பிடிக்கப்பட்டது. உப்புக்காற்று பாதிக்காமல் இருக்க தனியாக தயாரிக்கப்பட்ட சிமின்ட் பயன்படுத்தப்படுகிறது.

கடந்த 2014 டிசம்பர் ஏழாம் தேதி தொடங்கிய இந்த பணி தற்போது நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. அன்னதான மண்டபம், சீனிவாச கல்யாண மண்டபம், முடி காணிக்கை செலுத்தும் இடம் போன்றவை கீழ் தளத்தில் நிறைவு பெற்றுள்ளது. வெங்கடாஜலபதி , பத்மாவதி தாயார் சன்னதிகள் கருங்கற்களால் கட்டப்பட்டு வருகிறது. பிரம்மோற்சவம் நடக்கும் செப்., ஒன்றாம் தேதி பகல் 12.18 மணிக்கு சூரிய ஒளி வெங்கடாஜலபதி மூலஸ்தானத்தில் சூரிய ஒளி விழும் வகையிலும், இதுபோல தினமும் சூரியன் உதிக்கும் போது மூலஸ்தானத்தில் ஒளி விழும் வகையிலும் கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு மாதத்தில் பணிகள் முழுமை பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் டிசம்பரில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar