பதிவு செய்த நாள்
20
ஜூன்
2017
12:06
ஆர்.கே.பேட்டை : பிரதோஷ அபிஷேகம் மற்றும் கிருத்திகை திருவிழா இரண்டும் நாளை கொண்டாடப்பட உள்ளதால், அப்பன் ஈசனின் சிவாலயங்களிலும், பிள்ளை சுப்ரமணிய சுவாமி கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. முருகர் கோவில்களில், மாதாந்திர கிருத்திகை விழாக்கள் சிறப்பானவை. இந்த இரண்டு உற்சவங்களும், நாளை, புதன்கிழமை ஒரே நாளில் வருகின்றன.இதனால், அப்பனின் சிவாலயங்களிலும், பிள்ளை சுப்ரமணிய சுவாமி கோவில்களிலும், நாளை, சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. ஆர்.கே.பேட்டை அடுத்த, காந்தகிரி மலைக்கோவில், வங்கனுார் வியாசேஸ்வரர் மலைக்கோவில், அத்திமாஞ்சேரிபேட்டை கல்யாண சுந்தரேஸ்வரர், மட்டவளம் கோவத்சநாதேஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில், நாளை, மாலை 4:30 மணிக்கு, பிரதோஷ அபிஷேகம் நடைபெற உள்ளது.அதேபோல், அத்திமாஞ்சேரிபேட்டை நெல்லிக்குன்றம், நெடியம் கஜகிரி, அம்மையார்குப்பம் மற்றும் பொதட்டூர்பேட்டை சுப்ர மணிய சுவாமி கோவில்களில், கிருத்திகை உற்சவமும் நடக்கிறது.