பதிவு செய்த நாள்
20
ஜூன்
2017
12:06
திருமழிசை : திருமழிசை, ஜெகந்நாத பெருமாள் கோவிலில், ஜூலை 3ல், ஆனி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது திருமழிசை. இங்குள்ள, ஜெகந்நாத பெருமாள் மற்றும் பக்திஸார் எனும் திருமழிசை ஆழ்வார் கோவிலில், இந்தாண்டு ஆனி பிரம்மோற்சவம், ஜூலை 3ல், காலை 5:30 மணிக்கு மேல், 6:30 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கொடியேற்றத்தை தொடர்ந்து, அன்று மாலை, 6:00 மணிக்கு, தங்க தோளுக்கினியானில் ஜெகந்நாத பெருமாள் வீதிஉலா நடைபெறும். முன்னதாக, ஜூலை 2ல்மாலை, அங்குரார்ப்பணம் நடைபெறும்.தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், தினமும் காலை 9:00 மணி, மாலை 7:00 மணி ஆகிய வேளைகளில் பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா நடைபெறும்.
ஜூலை 4 காலை தங்க தோளுக்கனியான், மாலைதங்க தோளுக்கினியான்
ஜூலை 5 காலை 9:00 மணிகருட சேவை காலைதிருமழிசை ஆழ்வார், மாலைஅனுமந்த வாகனம்
ஜூலை 6 காலை சேஷ வாகனம், மாலைசந்திரபிரபை
ஜூலை 7 காலை மோகினி அவதாரம், மாலைசிம்ம வாகனம்
ஜூலை 8 காலை சூர்ணாபிஷேகம், மாலைதங்க தோளுக்கினியான்
ஜூலை 9 காலை 9:30 மணிதிருத்தேர், மாலைமாடவீதி உற்சவம்
ஜூலை 10 காலை தங்கதோளுக்கினியான், மாலைகுதிரை வாகனம், வேடுபறி
ஜூலை 11 காலை ஏழூர் புறப்பாடு, தீர்த்தவாரி, மாலைகொடியிறக்கம்
ஜூலை 12 மாலை புஷ்பயாகம், ஸ்ப்தாவரணம்