திருநெல்வேலி:நெல்லையப்பர் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி நேற்று நடந்தது.தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரியகோயில்,உண்டியல்களை இனி மாதம்தோறும் எண்ண வேண்டும் என அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில் வரும் 29ம்தேதி ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றததுடன் துவங்கி ஜூலை 7ம் தேதி தேரோட்டத்துடன் நிறைவுபெறுகிறது. எனவே அதற்கு முன்பாக நேற்றுஉண்டியல்கள் எண்ணப்பட்டன. சுவாமி, அம்பாள் சன்னதிகள் உள்ளிட்ட மொத்தமுள்ள 22 உண்டியல்கள்எண்ணப்பட்டன. இதில் நெல்லை ம.தி.தா.,இந்து மேல்நிலைப்பள்ளி மாணவர்களும்ஈடுபட்டனர். இதனை அறநிலையத்துறை உதவி ஆணையர் அன்னக்கொடி, நிர்வாக அலுவலர்ரோஷிணி, ஆய்வாளர் ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. மாலை வரை எண்ணும் பணிகள் நடந்தது.