பதிவு செய்த நாள்
22
ஜூன்
2017
01:06
கருமந்துறை: சின்னகல்வராயன்மலை பள்ளி கொண்ட ராமர் திருவிழா இன்று தொடங்குகிறது. சின்னகல்வராயன்மலை, தெற்குநாடு பஞ்சாயத்து, அத்திமரத்து வளவு, நத்தம்பட்டு, பெத்தகுறிச்சி வளவு ஆகிய கிராமங்கள் இணைந்து, பள்ளி கொண்ட ராமர் திருவிழாவை இன்று நடத்துகிறது. இதையொட்டி, இரவு, 9:00 மணிக்கு, பொன்னாச்சி அம்மன் சக்தி அழைத்தல் நடக்கிறது. நாளை இரவு, 9:00 மணிக்கு கரகாட்டம், குறவன் குறத்தி, நையாண்டி மேளம், வாணவேடிக்கை நடக்கிறது. வரும், 24 காலை, 10:00 மணிக்கு பொங்கல் வைத்தல் மற்றும் சுவாமிக்கு சிறப்பு அபி?ஷகம் நடக்கிறது. 25 மதியம், 12:00 மணிக்கு மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.