கீழக்கரை, உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி சமேத மங்களநாதசுவாமி கோயிலில் சகஸ்ரலிங்கத்திற்கு அருகில் தனி சன்னதி கோயிலாக மாணிக்கவாசகர் எழுந்தருளியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் மகம் அன்று மாணிக்கவாசகரின் ஜென்ம நட்சத்திரம் தினம் குருபூஜை விழாவாக கொண்டாடப்படுகிறது. வருகிற ஜூன் 28 புதன்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் மாணிக்கவாசகருக்கு 18 வகையான அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பு நிகழ்ச்சி நடக்கும்.