துளசிக்கு நீர் ஊற்றுவது, விளக்க ஏற்றுவது போன்றவற்றை ஆண்கள் செய்யலாமா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2017 04:06
செடிகொடிகளுக்கு தினசரி ஜலம் விடுவது என்பது அவற்றுக்கு உயிரை அளிப்பது போன்றது. அதிலும் தெய்விகச் செடியான துளசியை ஜலம் விட்டு வளர்த்தல் என்பது செய்த பாவத்தை அகற்றும். இதை ஆண்-பெண் என அனைவரும் செய்யலாம். ஆனால் சூரியன் உதிக்கும் காலை மற்றும் சூரியன் மறையும் மாலை நேரத்தில், வீட்டு வாசலிலும் வீட்டில் தெய்வ சன்னிதியிலும் தீபத்தை ஏற்றுதல் என்னும் செயலை மட்டும், குடும்பத்திலுள்ள சுமங்கலிப் பெண்கள் செய்வதே சிறந்தது வீட்டில் பெண்கள் (பெண்கள் குழந்தைகள்) யாருமே இல்லாத சமயத்தில்தான், ஆண்கள் தீபத்தை ஏற்றலாம். மற்ற நேரங்களில் பெண்கள்தான் இந்தச் செயலைச் செய்ய வேண்டும்.