விநாயகர் கோவில் திருப்பணிக்கு துணை சபாநாயகர் நன்கொடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூன் 2017 01:06
புதுச்சேரி: கற்பக விநாயகர் கோவிலில் மண்டபம் அமைக்கும் பணிக்கு, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, 50 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினார். லாஸ்பேட்டை தொகுதி குறிஞ்சி நகர் கற்பக விநாயகர் கோவிலில், மண்டபம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை பார்வையிட்ட துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, சப்தகிரி அறக்கட்டளை சார்பில், மண்டபம் அமைக்கும் பணிக்கு 50 ஆயிரம் ரூபாய் -நன்கொடை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், வட்டார காங்., தலைவர் ஐயப்பன், தொகுதி நிர்வாகிகள், மகளிர் அமைப்பினர் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.