மதுராந்தகம் : மதுராந்தகம் ஏரிகாத்த கோதண்டராமர் கோவில் உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டன. 2.58 லட்ச ரூபாய் கிடைத்தது. மதுராந்தகத்தில், புகழ்பெற்ற, ஏரிகாத்த கோதண்டராமர் கோவில் உள்ளது. இக்கோவில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள, உண்டியலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவது வழக்கம்.இந்நிலையில், ஐந்து மாதங்களுக்கு பிறகு, நேற்று, துணை ஆணையர் தனபாலன் முன்னிலையில், உண்டியல்கள் திறக்கப்பட்டன. செயல் அலுவலர் தியாகராஜன் மற்றும் கோவில் ஊழியர்கள் எண்ணினர். 2 லட்சத்து, 58 ஆயிரத்து, 153 ரூபாய் கிடைத்தது.