பதிவு செய்த நாள்
29
ஜூன்
2017
02:06
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி புவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விக்கிரவாண்டி புவனேஸ்வரி உடனுறை புவனேஸ்வரர் கோவில் கிராம பொதுமக்களால் புதுப்பிக்கப்பட்டது. அதன் கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 26ம் தேதி காலை யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை 9:40 மணியளவில் கோவிலிலுள்ள வினாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், புவனேஸ்வரி, புவனேஸ்வரர் கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. யாகசாலை பூஜை மற்றும் அபிஷேகங்களை விக்கிரவாண்டி ரவி குருக்கள் தலைமையில், திருவான்மியூர் கணேஷ் சிவாச்சாரியார், சோம்நாத், வேதாத்திரி ஆகியோர் செய்தனர் . கோவில் தர்மகர்த்தா சுப்புராயலு, ரவி, குமாரசாமி மற்றும் கிராம மக்கள், விழா ஏற்பாடுகளை செய்தனர். இதில், ராதாமணி எம்.எல்.ஏ., மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.