பதிவு செய்த நாள்
29
ஜூன்
2017
01:06
வெண்மனம்புதுார்: வெண்மனம்புதுார், வலம்புரி விநாயருக்கு, வரும் 3ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கடம்பத்துார் ஊராட்சிக்குட்பட்டது வெண்மனம்புதுார். இங்கு, விடையூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது வலம்புரி விநாயகர் கோவில். இந்த கோவிலில், மகா கும்பாபிஷேகம், வரும் 3ம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக, வரும் 2ம் தேதி. காலை 6:30 மணிக்கு. கணபதி ஹோமத்துடன் மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி துவங்குகிறது. பின், கோ பூஜையும், அதை தொடர்ந்து முதல்கால யாகசாலை பூஜையும் நடைபெறும்.கும்பாபிஷேக நாளான 3ம்தேதி, காலை 6:30 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், காலை 9:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி.அதை தொடர்ந்து, காலை 9:30 மணிக்கு, கோபுர மகா கும்பாபிஷேகம், பின், காலை 10:00 மணிக்கு, வலம்புரி விநாயகருக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெறும்.