பதிவு செய்த நாள்
01
ஜூலை
2017
02:07
தர்மபுரி: தர்மபுரி, எஸ்.வி. ரோட்டில் உள்ள சித்தலிங்கேஸ்வரர், முத்து மாரியம்மன் கோவிலில், கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கடந்த, 28ல், காலை, 9:00 மணிக்கு கணபதி ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை, தன பூஜைகள் உள்பட பால்குட ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம், காலை, 9:00 மணிக்கு மேல், விசேஷ சாந்தி தத்துவார்ச்சனை நடந்தது. நேற்று கிருபானந்த சுவாமிகள் சிவாச்சாரியார், கோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். ஏற்பாடுகளை, விழா கமிட்டி குழுவினர் லோகநாதன், புஷ்பா, தாண்டவன் ஆகியோர் செய்தனர். இதேபோல், தர்மபுரி குமாரசுவாமிப்பேட்டை, வன்னியர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கோலாகலமாக நடந்தது.