லட்சுமி நாராயண வேணுகோபால சுவாமி கோவிலில் சக்கரத்தாழ்வார் திருநட்சத்திர திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூலை 2017 12:07
கோவை : சக்கரத்தாழ்வாரின் திருநட்சத்திரத்தையொட்டி, லட்சுமி நாராயண வேணுகோபால சுவாமி கோவிலில் மகாயக்ஞம் நடந்தது. பெரிய கடைவீதியிலுள்ள, இக்கோவிலில் நேற்று காலை, சக்கரத்தாழ்வாருக்கு வழக்கமான பூஜைகளை தொடர்ந்து, சகலவித திரவியங்களில் திருமஞ்சனம் நடந்தது. மலர்மாலைகள், பட்டாடைகளால் சுவாமி அலங்கரிக்கப்பட்டார். யாகசாலை அமைக்கப்பட்டு, வேதவிற்பன்னர்கள் வேதங்களையும், மங்களவாத்திய இசை முழங்க, யாகசாலையில் மகாயக்ஞம் நடந்தது. இதன் பின், சுவாமிக்கு மகாதீபாராதனை நடந்தது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு, பிரசாதங்கள் வழங்கப்பட்டன.