பதிவு செய்த நாள்
03
ஜூலை
2017 
12:07
 
 ஊத்துக்கோட்டை: ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில் சன்னதியில் உள்ள சாய்பாபாவிற்கு, வரும், 8ம் தேதி, குரு பவுர்ணமி விழா நடைபெற உள்ளது. ஊத்துக்கோட்டை, ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ளது சாய்பாபா சன்னதி. ஒவ்வொரு வியாழக்கிழமையும், சிறப்பு பூஜை நடைபெறும். வரும், 8ம் தேதி, குரு பவுர்ணமி விழா நடைபெற உள்ளது. இதையொட்டி, அன்றைய தினம், காலை, 6:00 மணிக்கு, காகட ஆரத்தி, 7:30 மணிக்கு பாபாவிற்கு பாலாபிஷேகம் மற்றும் அன்னதானம், 11:00 மணிக்கு சாய்சரித்திரம் பாராயணம் நடைபெறும். மதியம், 12:00 மணிக்கு, மதிய ஆரத்தி, 12:30 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும். மதியம், 3:00 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் மங்கள வாத்தியம், செண்டை மேளம் முழங்க, சாய் பஜனைக் குழு மற்றும் கோலாட்டத்துடன் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.