நாமக்கல் மாரியம்மன் கோவில் விழா: பக்தர்கள் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூலை 2017 12:07
நாமக்கல்: நாமக்கல், கொண்டிசெட்டிபட்டி மஹா மரியம்மன் மற்றும் மதுரை வீரன் கோவில் திருவிழா கோலாகலமாக துவங்கியது. நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட, கொண்டிசெட்டிப்பட்டியில் உள்ள மஹா மாரியம்மன் மற்றும் மதுரை வீரன் கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் நேற்று துவங்கியது. அதற்காக அம்மன் மற்றும் மதுரை வீரன் சுவாமிக்கு அபிஷேகம் செய்ய, மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்து, அய்யப்பன் கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்றனர். இன்று மாலை, 5:00 மணிக்கு மாவிளக்கு பூஜையுடன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. நாளை காலை, 7:00 மணிக்கு பொங்கல் வைத்தலும், 10:00 மணிக்கு கிடா வெட்டுதல் மாலை, 3:00 மணிக்கு வேல், அக்னி சட்டி எடுத்தல் மற்றும் அலகு குத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 5ல் காலை, 7:00 மணிக்கு மஞ்சள் நீர் விழா நடக்கிறது.