திருத்தங்கல் நின்ற நாராயணபெருமாள் கோயிலில் ஆனிவிழா துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2017 11:07
சிவகாசி: திருத்தங்கல் நின்ற நாராயணபெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்ஸவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.108 திவ்யதேசங்களில் ஒன்றான நின்ற நாராயண பெருமாள் கோயில் திருத்தங்கலில் அமைந்துள்ளது.பிரசித்தி பெற்ற இக் கோயிலில் ஆனிபிரமோற்ஸவ விழா நேற்று காலை 7:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து அனந்த பட்டர் விழா கொடியினை ஏற்றினார். விழாவையொட்டி தினமும் பெருமாள், செங்கமலத்தயாருடன் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் வந்து அருள் பாலிக்கிறார். முக்கிய நிகழ்ச்சியாக ஜூலை 11 ல் தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அருள்பெறுவர். ஏற்பாடுகளை தக்கார் சுந்தரராசு, செயல் அலுவலர் அறிவழகன் செய்கின்றனர்.