Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னை பார்த்தசாரதி கோவிலில் ... அழகு நாச்சியம்மன் கோவில் முளைப்பாலிகை ஊர்வலம் அழகு நாச்சியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரந்தமலை கன்னிமார் தீர்த்தம்: வற்றியதால் பக்தர்கள் ஏமாற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கரந்தமலை கன்னிமார் தீர்த்தம்: வற்றியதால் பக்தர்கள் ஏமாற்றம்

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2017
12:07

நத்தம்: நத்தம் அருகே கரந்த மலை கன்னிமார் கோயில் தீர்த்தம் நீர்வரத்து இன்றி வற்றியதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.  திண்டுக்கல்–நத்தம் ரோட்டில் உலுப்பகுடி பிரிவில் இருந்து 4 கி.மீ., தொலைவில் கரந்தமலை அடிவாரப்பகுதியில் அமைந்துள்ளது கன்னிமார் கோயில். மலைப்பகுதியில் இருந்து ஓடை வழியாக வரும் தண்ணீர் கோயில் அருகே சிறு அருவியாக கொட்டும்.  ஆண்டு முழுவதும் இதில் நீர் வரத்து இருக்கும். கோடை காலத்திலும் சிறிதளவு நீராவது வந்து கொண்டு இருக்கும். ஆண்டு தோறும் பிரபலமான நத்தம் மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கிருந்து தீர்த்தம் எடுத்து செல்வது வழக்கம்.  இது தவிர மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, மற்றும் சுற்றுப்பகுதியில் நடக்கும் கும்பாபிஷேகம் உள்ளிட்ட விழாக்களுக்கும் பக்தர்கள் தீர்த்தம் எடுத்துச் செல்வர். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக இப்பகுதியில் போதிய மழை இல்லததால் மலைப்பகுதி சிற்றோடைகளில் நீர் வரத்து நின்று போனது.  சில மாதங்களாக கன்னிமார் தீர்த்தமும் வற்றியது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இப்பகுதியில் கோடை மழை பெய்தது. அருவிக்கு நீர்வரத்து ஏற்படும் வகையில் கூடுதல் மழை பெய்ய பெய்யுமா என்ற எதிர்பார்ப்புடன் பக்தர்கள் உள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி பூர விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவில் 10ஆம் நாள் அண்ணாமலையார் மலையில் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியுதவி அளித்த பக்தர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் 16 ம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar