உடுமலை: உடுமலை, தில்லை நகர் சாய்பாபா கோவிலில் நேற்று நான்காம் ஆண்டுவிழா மற்றும் குருபூர்ணிமா சிறப்பு பூஜைகள் துவங்கியது. குருபூர்ணிமா கொண்டாடப்படுவதையொட்டி சாய்பாபா கோவிலில் நேற்று காலை, 5:30 மணிக்கு காக்கட ஆரத்தியுடன் சிறப்பு பூஜைகள் துவங்கின. தொடர்ந்து கணபதி ஹோமம், தத்தாத்ரேயர் ஹோமம், அபி÷åக ஆராதனையும் நடந்தன. மாலையில், சாய்பஜன் குழுவின் சார்பில் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும், சிறப்பு ஆரத்தியும் நடை பெற்றன. இன்று மாலை, 4:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது.