அருப்புக்கோட்டை மீனாட்சி திருக்கல்யாணம் பக்தர்கள் கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூலை 2017 12:07
அருப்புக்கோட்டை, அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயில் பக்தர்கள் கோரிக்கையை அடுத்த ஆண்டிலாவது அறநிலையத்துறை நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சொக்கலிங்கபுரத்தில், அறநிலையத்துறையை சேர்ந்த, மீனாட்சி சொக்கநாதர் கோயில் உள்ளது. இங்கு, ஒவ்வொரு ஆண்டும் ஆனி பிரமோற்சவ விழா 13 நாட்கள் நடைபெறும். கடந்த வாரம் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் நடந்தது. மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை போன்று இங்கும் நடப்பதால், உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து ஐந்து ஆயிரத்திற்கும் மேல் பக்தர்கள் வருவர். திருக்கல்யாணம் கோயில் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடக்கும். இதில் மண்டபத்தில் அமர்ந்து பார்க்க 50 ரூபாய் கட்டணம். கோயில் மண்டபத்தில் உள்ளே 400 பேர் தான் உட்கார முடியும். திருக்கல்யாணத்தை பார்க்க வந்த நான்கு ஆயிரத்திற்கும் மேல் பக்தர்கள் மண்டபத்திற்கு வெளியில் நின்றனர். கோயில் வளாகம் உள்ளே வைத்து அனைவரும் பார்க்க கூடிய அளவில் திருக் கல்யாணம் நடத்த நிர்வாகம் ஏற்பாடு செய்யவேண்டும். இதை ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் கோரிக்கை வைத்தும், மண்டபத்திற்குள் வைத்து, பூட்டி திருக் கல்யாணம் நடக்கிறது. அடுத்த ஆண்டாவது பக்தர்கள் கோரிக்கை நிறைவேற அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.