தேவகோட்டை: தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் ஆனித்திருவிழா ஜூன் 29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சொர்ணமூர்த்தீஸ்வரர், பெரியநாயகி அம்மன் மற்றும்பரிவார மூர்த்திகள் சிறப்பு வாகனங்களில் வீதி உலா நடந்தது. ஒன்பதாம் நாளான நேற்று ஆனி மாதம் கேட்டை நட்சித்திரத்தில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் புதியதேர் பணி நடைபெறுவதால் சுவாமி,அம்மன் சப்பரத்தில் வீற்றிருக்க பக்தர்கள் தள்ளிவந்தனர்.