Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலை அகரத்தில் ஊரணி பொங்கல் கண்டதேவி கோயிலில் சப்பர பவனி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் மாங்கனி திருவிழா கோலாகலம்: பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2017
12:07

காரைக்கால்: காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா கோலாகலம் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Default Image
Next News

சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார். 63 நாயன்மார்களின் பெண் நாயன்மாரான காரைக்கால் அம்மையாரின் வாழ்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் ஆண்டுதோறும் காரைக்காலில் மாங்கனி திருவிழா நடக்கிறது. பழங்காலத்தில் சிவபக்தியான புனிதவதியாரை மணந்த பரமதத்தர் வீட்டிற்கு கொடுத்து அனுப்பிய மாங்கனிகள் இரண்டில் ஒன்றை அடியார் வேடத்தில் வீட்டிற்கு வந்த சிவபெருமானுக்கு புனிதவதியார் உணவுடன் சேர்த்து படைத்தார். பின் வீட்டிற்கு வந்த கணவருக்கு மீதமிருந்த மாங்கனி ஒன்றை வழங்க அதன் சுவை அதிகமாக இருந்தால் மற்றொரு பழத்தை கேட்க செய்வதறியாது திகைத்த அம்மையார் இறைவனை வேண்டியதால் கையில் மாங்கனி கிடைத்தது.அதை கணவரிடம் வழங்கினார்.

முன்பு சாப்பிட்ட பழத்தின் சுவையை விட அதிகமாக இருந்ததால் பழம் குறித்து பரமதத்தர் விபரம் கேட்டார். அப்போது சிவபெருமாள் வழங்கியது என கூற அதை ஏற்க மறுத்த பரதத்தர் மீண்டும் ஒரு பழம் வரவழைத்து கொடு என கேட்டார்.அப்போது கணவன் முன் இறைவனை வேண்டி மீண்டும் ஒரு பழத்தை பெற்று கணவனிடம் காண்பித்தார்.இதை பார்த்த பரமதத்தர் புனிதவதியார் நீ தெய்வ பிறவி என்று கூறி பிரிந்து மதுரை சென்று மறுமணம் செய்து வாழ்ந்து வந்தார். கணவனை காண மதுரை சென்ற புனிதவதியாரை கண்ட பரமதத்தர் தனது இரண்டாவது மனைவி மகளுடன் காலில் விழுந்து வணங்கினார்.பின் கணவனுக்காக ஏந்திய உடலை வெறுத்து சிவனிடம் வேண்டி பேய் உருவம் பெற்றார்.அம்மையார் பின் சிவபெருமாள் உள்ள கையிலாயத்திற்கு சென்றார்.புனிதமிக்க கைலாயத்தில் தன் பாதங்கள்படகூடாது என்பதால் தலைகீழாக கைகளால் நடந்து சிவனை அடைந்தார். அப்போது தாயும் தந்தையும் அற்ற சிவபெருமான் காரைக்கால் அம்மையாரை அம்மையே அன்று அழைத்தாக வரலாறு இந்த வரலாற்று நிகழ்வை உணர்ந்தும் விதமாக மாங்கனி திருவிழா நடக்கிறது.

இத்திருவிழா கடந்த 6ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.அன்று மாலை பரமதத்த செட்டியார் மாப்பிள்ளை ஊர்வலம் நடந்தது.நேற்று முன்தினம் காரைக்கால் அம்மையார் பரமதத்தருக்கு திருக்கல்யாணம் நடந்தது.மாலை பிஷாடணமூர்த்தி வெள்ளைசாத்தி புறப்பாடும்.இரவு திருமண முடிந்த காரைக்கால் அம்மையார் பரமதத்தர் முத்து பல்லக்கில் வீதி உலா நடந்தது. நேற்று அதிகாலை பிஷாடணமூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. நான்கு திசையிலும் வேதபாராயணங்கள் எதிரொளிக்க மேள தாளம் முழுங்க காலை.6.30 மணிக்கு பவழக்கால் விமானத்தில் சிவபெருமான் காவியுடை, ருத்திராட்சம் தாங்கி பிச்சாண்டவர் மூர்த்தியாக எழுந்தருளி வீதி உலா நடந்தது. அப்போது சிவபெருமானுக்கு பக்தர்கள் மாங்கனியை வைத்து அர்ச்சனை செய்து பின் வீடுகளில் மாடிகளில் இருந்து பக்தர்கள் வேண்டுதலையொட்டி மாங்கனிகளை வீசும் நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியில் அசனா எம்.எல்.ஏ.,கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர் செல்வம், தனிஅதிகாரி ஆசைத்தம்பி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாங்கனிகளை பிடித்து சென்றனர். மாங்கனி திருவிழாவில் 300க்கு மேற்பட்ட போலீஸ்சார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar