பர்கூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த ஜெகினிக்கொல்லை கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில், உற்சவ சிலை பிரதிஷ்டை செய்து, தேர்த்திருவிழா நடந்தது. கடந்த, 5 காலை, 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. மாலை, 4:00 மணிக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 6:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று காலை, 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபி?ஷகம் ஆராதனை மற்றும் மங்களார்த்தி, பெண்கள் கரகத்துடன் மாவிளக்கை ஊர்வலமாக எடுத்துக் கொண்டு கோவிலுக்கு வந்தனர். மாலையில், பக்தர்கள் தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றினர்.