கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் காணிக்கை உண்டியல் மூலமாக 5.29 லட்சம் ரூபாய் கிடைத்தது. கடலுார், பாடலீஸ்வரர் கோவிலில் காணிக்கை உண்டியல்கள் நேற்று திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜோதி முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு, வங்கி ஊழியர்கள், தன்னார்வ தொண்டர்கள் என 30 பேர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், 5 லட்சத்து 29 ஆயிரத்து 412 ரூபாய்; 23.5 கிராம் தங்க நகைகள், 145 கிராம் வெள்ளி பொருட்கள் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். கோவில் செயல் அலுவலர் நாகராஜன், ஆய்வாளர் சுபத்ரா உடனிருந்தனர்.