விட்டிலாபுரம் : பேரம்பாக்கம், தான்தோன்றி அம்மன் கோவிலில், கும்பாபிஷேகம் நடந்தது. கல்பாக்கம் அடுத்த, பேரம்பாக்கத்தில், தான்தோன்றி அம்மன் கோவில், கிராம பொதுக்கோவிலாக விளங்குகிறது.இக்கோவிலில், புதிதாக அம்மன் சன்னதி அமைத்தும், அம்மன் உள்ளிட்டோருக்கு, புதிய சிலைகள் பிரதிஷ்டை செய்தும், திருப்பணிகள் செய்யப்பட்டன.தொடர்ந்து, கணபதி,லட்சுமி, நவக்கிரக ஹோமங்களுடன் வழிபாடு துவக்கப்பட்டது. நேற்று முன்தினம் காலை, இரண்டாம்கால யாகசாலை வழிபாட்டிற்கு பின், கோபுர கலசங்களில் புனித நீரூற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.