நாம் செய்த வினைகளுக்கேற்ப நன்மை, தீமைகள் ஏற்படுகின்றன. இந்த அனுபவங்களுக்கு நம்மைத் தவிர, பிறரை நாம் நல்லவர்கள் என்றோ, தீயவர்கள் என்றோ காரணமாகக் கருதுவது முறையாகாது. ஏனென்றால், நன்மையும் தீமையும் பிறர் தர வாரா இல்லையா? அவற்றின் மூலகாரணத்தை நாம் ஆராய்ந்தோமானால், அதற்கெல்லாம் அடிப்படைக் காரணிகள் நாமாகத்தான் இருப்போம். இப்படியிருக்க, பிறரை நல்லவர் என்றோ, கெட்டவர் என்றோ அனுமானிக்க நமக்கு ஏது உரிமை? எல்லாம் அவன் செயல் என்ற எண்ணம் நமக்குள் வர வேண்டும். இந்தப் பக்குவ நிலைக்கு வருவது மிகக் கடினம்தான். ஆனால், முயன்று பார்ப்பதில் எந்த நஷ்டமும் இல்லையே!