நூறு ஆண்டுகள் என்று மனிதனுக்கு ஆயுள் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதில் பாதி (50 வருடம்) இரவில் சென்று விடுகிறது. உறங்கி விடுகிறோம். மீதிப் பாதி 50ல் பன்னிரெண்டரை வருடம் பால பருவத்திலும், மீதி பன்னிரெண்டரை வருடம் வியாதி, பிரிவு, துக்கம், உத்தியோகம் முதலியவற்றிலும் செலவழிந்து விடுகிறது. இவ்விதம் ஒரு மனிதனுடைய ஆயுளானது நீர் அலைகள் போல சஞ்சலங்களோடு இருக்கும்போது அவனுக்கு சுகம் என்பது எங்கிருந்து கிடைக்கப்போகிறது?