நூறு வயது வரை ஒரு மனிதன் இருப்பான் என்று வேதம் கூறுகிறது. ஆனால், ஒரு மனிதன் நூறு வயது வரை வாழ முடியாமல் இறப்பதற்கு என்ன காரணம்? என திருதராஷ்டிரன் கேள்வி எழுப்ப அதற்கு விதுரர் பதில் கூறுகிறார். அதிகமான அகங்காரம், அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபம் கொள்ளுதல், தர்மம் செய்யாமலிருத்தல், தான் மட்டும் நன்றாக வாழ வேண்டும் என நினைத்தல், நண்பனுக்கு துரோகம் செய்தல் என்ற இந்தச் செயல்கள் கூர்மையான கத்தி போல் மனிதனைக் கொன்று விடுகின்றன. எமன் வந்து கொல்வதில்லை.