பதிவு செய்த நாள்
11
ஜூலை
2017
03:07
அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டை குழந்தைவேல்புரத்தில் உள்ள ‘இஸ்கான்’ ஹரே கிருஷ்ண பஜனை
கூடம் சார்பாக, 3 ம் ஆண்டு ஸ்ரீ ஜகந்நாதர் ரத யாத்திரை புளியம்பட்டி
ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலிருந்து துவங்கியது. விருதுநகர் ரோடு, பெரிய
கடை வீதி, பந்தல்குடி ரோடு, வெள்ளக்கோட்டை, சொக்கலிங்கபுரம் தேவாங்கர்
மேல்நிலை பள்ளி வரை சென்று முடிந்தது. ரத யாத்திரையை ஜெயபாதக ஸ்வாமி,
சுகதேவ், சீனீவாஸ் ராமானுஜதாஸ், விக்ரம கோவிந்ததாஸ், ஜெயகோபி தாஸ், தொழில்
அதிபர் தினகரன் துவக்கி வைத்தனர். மாலையில் சிறப்பு சொற்பொழிவு,
கீர்த்தனம், நாடகம், ஜகந்நாதர் லீலை,‘பில்வ மங்கள தாகூரர்’ நாடகம்
நடந்தது. ஏற்பாடுகளை வேணுதாரி கன்னையா தாஸ் தலைமையில் நிர்வாகிகள்
செய்தனர்.