பதிவு செய்த நாள்
12
ஜூலை
2017
11:07
புதுடில்லி: கோவில், மசூதி, தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் வழங்கப்படும் அன்னதானம், பிரசாதங்களுக்கு, ஜி.எஸ்.டி., கிடையாது’ என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வழிபாட்டு தலங்கள், மத அமைப்புகள் சார்ந்த அன்னக்கூடங்களில் வழங்கப்படும் அன்னதானம், பிரசாதங்களுக்கு, ஜி.எஸ்.டி., உண்டு என, தவறாக செய்திகள் வெளியாகி உள்ளன; இது, உண்மையல்; இதற்கு, ஜி.எஸ்.டி., கிடையாது.ஆனால், இவற்றை தயாரிக்க பயன்படுத்தப்படும் இடுபொருட்களான, சர்க்கரை, சமையல் எண்ணெய், நெய், வெண்ணெய் போன்றவற்றுக்கு, ஜி.எஸ்.டி., உண்டு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.