பதிவு செய்த நாள்
12
ஜூலை
2017
12:07
காஞ்சிபுரம்: ஒரத்தி அருகே கோவிலில் கடவுள் சிலைகளை எட்டி உதைத்தும், தூக்கிப் போட்டு உடைத்தும் வெறியாட்டம் ஆடியவர்களை போலீசார் ஏன் கண்டுகொள்ளவில்லை என, கேள்வி எழுந்து உள்ளது.
ஒரத்தி அடுத்துள்ளது, கொங்கரைமாம்பட்டு கிராமம். இக்கிராமத்தில் பொன்னியம்மன் கோவில் உள்ளது. ஒரு வாரத்திற்கு முன், இக்கோவிலில் பட்டப்பகலில், உச்சகட்ட போதையில் மூன்று இளைஞர்கள் நுழைந்து உள்ளனர். அதே பகுதியைச்சேர்ந்தவர்கள் தான் எனக் கூறப்படுகிறது. அவர்கள் அங்கிருந்த கடவுள் சிலைகளை காலால் எட்டி உதைத்தும், கை யிலிருந்த குச்சியால் அடித்தும், ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்தும், அட்டகாசம் புரிந்துள்ளனர். அங்கிருந்த சில சிலைகளை, தூக்கிப் போட்டும் உடை த்துள்ளனர். அந்த அட்டூழியங்களை, அவர்களில் ஒருவன், தன் கையிலிருந்த மொபைல் போனில் படம் எடுத்து உள்ளான். இந்தக் காட்சிகள், ‘வாட்ஸ் ஆப்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், ‘வைரலாக’ பரவி, ஆன்மிகவாதிகளுக்கு மன கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து, ஒரத்தி காவல் நிலையத்தில், 6ம் தேதி ஊர்ப்பொதுமக்கள் புகார் அளித்து உள்ளனர். எனினும், இது வரை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், புனிதமாக கருதப்படும் கோவிலில்அத்துமீறி செயல்பட்டோர், சுதந்திரமாக சுற்றித்திரிகின்றனர். போலீசார் காட்டும் மெத்தனம், வரும் காலங்களில், வேறு சில விபரீதங்களுக்கு வழி வகுக்கும் என, அச்சம் தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.– நமது நிருபர் –