திருவாரூர் மாவட்டம், கொல்லுமாங்குடி அருகில் உள்ளது கீரனுõர் சிவலோகநாதர் திருக்கோயில்! சிவனாருக்கு எதிராக தட்சன் நடத்திய யாகத்தில் கலந்துகொண்டதுடன் அசுரர்களுக்கு அவிர்பாகமும் ஏந்திக் கொடுத்ததால், சிவநிந்தை செய்த பாவத்துக்கு ஆளானார் அக்னி பகவான், கிளியாக மாறும்படி சாபமும் பெற்றார். அப்படிக் கிளியாக மாறியவர் இந்தத் தலத்துக்கு வந்து சிவனாரை வழிபட்டு தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். அக்னியை மன்னித்த சிவபெருமான், மீண்டும் பழைய உருவத்தைப் பெறும்படியாக அவருக்கு அருள்புரிந்தாராம். ஆக, இந்தத் தலத்துக்கு வந்து, அறிந்தும் அறியாமலும் செய்த தவறுக்காக வருந்தி இறைவனைப் பிரார்த்திக்க, விமோசனம் கிடைக்கும்; பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.