பதிவு செய்த நாள்
14
ஜூலை
2017
01:07
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை அடுத்து, விட்டுகட்டியில் உள்ள மஹா கணபதி விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. கிருஷ்ணராயபுரம் தாலுகா, சிந்தலவாடி பஞ்சாயத்து, விட்டுகட்டியில் மஹா கணபதி விநாயகர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில் விநாயகருக்கு பால், தயிர், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், சந்தனம் ஆகிய பொருட்களைக் கொண்டு அபி?ஷகம் செய்யப்பட்டது. பின்னர், தீபாராதனை காட்டப்பட்டது. லாலாப்பேட்டை சுற்று வட்டாரத்தில் உள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.