கம்பம், கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில் ஆனித்தேரோட்டடம் 14 ஆண்டிற்குப்பின் நடந்தது. ஜூலை 11 மாலை தேரோட்டம் துவங்கியது.அன்று வ.உ.சி.,திடலிலும், மறுநாள் பார்க்ரோட்டிலும் நிறுத்தப்பட்டது.மூன்றாம் நாளான நேற்று மாலை 4:10 மணிக்கு ஆயிரக்கணக்கன பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தை வாழ்த்துவது போலசாரலும் துவங்கியது. அங்கிருந்து வேலப்பர் கோயில் வீதி, மெயின்ரோடு வழியாக தேர் இழுக்கப்பட்டு மாலை 6:00 மணிக்கு நிலை நிறுத்தப்பட்டது. நிகழ்ச்சிகளை ரதஉற்சவ கமிட்டித் தலைவர் எஸ்.டி.டி. இளங்கோவன், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், செயல் அலுவலர் செந்தில்குமார் செய்தனர்.உத்தமபாளையம் டி.எஸ்.பி.,அண்ணாமலை தலைமையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.