சென்னை: அகோரிகள் வந்ததால் சென்னை தி.நகர் திருப்பதி தேவஸ்தான கோயில் மூடப்பட்டதாக தகவல் பரவியது இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்திற்குரிய கோவில் உள்ளது. இங்கு அகோரிகள் (மனித மாமிசம் உண்பவர்கள்) இருவர் கோவிலுக்கு வந்ததாகவும், இதனையடுத்து இன்று கோவில் மூடப்பட்டதாகவும் ஒரு தகவல் பரவியது. ஆனால் இது போன்று எதுவும் நடக்கவில்லை என கோயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. சில சம்பிரதாய யாகம் மற்றும் தூய்மை பணி காரணமாக காலை 5 மணி முதல் 11.55 வரை நடை சாத்தப்பட்டிருக்கும் எனவும், தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மேல் நடை திறக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. போலீஸ் தரப்பிலும் இது குறித்து விசாரித்த போது அகோரிகள் யாரும் வந்ததாக எங்களுக்கு தகவல் இல்லை என தெரிவித்தனர். அது தவறான தகவல் என்றும் கூறினர்.