திருவதிகை திரவுபதியம்மன் கோவிலில் தீ மிதித்திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2017 05:07
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை திரவுபதியம்மன் கோவில் தீ மிதித் திருவிழா கோலாகலமாக நடந்தது. பண்ருட்டி அடுத்த திருவதிகை திரவுபதியம்மன் கோவிலில் கடந்த மாதம் 26ம்தேதி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்து, அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று மாலை தீமிதித்திருவிழா நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தங்களது வேண்டுதலுக்காக சுவாமிக்கு தீமிதித்து நேர்த்திகடனை செலுத்தினர். தீமிதி திருவிழாவையொட்டி உறு்சவர் திரவுபதியம்மன், அர்சுனனுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.